நேற்றைய செய்தி::
சென்னை: தேனியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மாலை விமானம் மூலம் மதுரை செல்கிறார்.
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தேனியில் இன்று அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாலை 3.40 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் தேனி சென்றடைகிறார்.
தனி விமானம் மூலம் ஜெயலலிதா மதுரை செல்வார் எனத் தெரிகிறது. சமீபத்தில் இந்த விமானத்தில் ஏறி ஜெயலலிதாவின் சசிகலா டிரையல் பார்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
தேனி பொதுக் கூட்டத்தில் இன்று மாலை கலந்து கொள்ளும் ஜெயலலிதா, அண்ணா பிறந்தநாளான நாளை ஆண்டிப்பட்டியில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
இன்றைய செய்தி:
நேற்று (14-09-2008) இரவு ஜெயலலிதா கலந்துகொண்ட இப்பொதுக்கூட்ட நிகழச்சிகள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மேடைப்பேச்சுக்களை மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்த சன் நியூஸ் தொலைக்காட்சியானது, முதன்முறையாக அதிமுக பொதுக்கூட்டத்தை ஒளிபரப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் சன் குழுமம் இனி முழுக்க முழுக்க திமுக விற்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
- உழவன்
0 comments:
Post a Comment