Wednesday, June 18, 2008

மிகச் சிறந்த அரசியல்வாதி ராமதாஸ் தான்!

வாக்காளர்களாகிய நாம் எப்போதுமே அரசியல்வாதிகளிடம் தோற்றுதான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால் எப்போதுமே ஜெயித்துக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள். அதிலும் குறிப்பாக ஐயா ராமதாஸ் அவர்கள்தான்.
 
கடந்த கால அரசியலைக் கொஞ்சம் பாருங்கள் வாக்காளப் பெருமக்களே.. பாட்டாளி மக்கள் கட்சியானது எப்போதுமே வெற்றிபெறுகின்ற கூட்டணியில்தான் இருந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
 
தற்போது நடைபெற்று முடிந்த மற்ற மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கு பி.ஜே.பி. குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
 
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் தான் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன என்பதும், வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி. யானது அ.தி.மு.க. உடன்தான் கூட்டணி அமைத்தாகவேண்டும் என்பதும் ஐயா ராமதாஸ் அவர்களுக்குத் தெரயாதா என்ன..
 
இதையெல்லாம் நன்கு ஆராய்ந்து வைத்திருக்கிற ராமதாஸ் அவர்கள், இதே கூட்டணியில் நீடித்தால், அடுத்த தேர்தலுக்குப்பின்பு பா.ம.க. வானது எதிர்க்கட்சி வரிசையில்தான் இடம்பெறமுடியும் என்பதால், எப்படியாவது இந்தக் கூட்டணியை விட்டு வெளியேற முடிவுசெய்திருப்பார். இதற்காக அவர் தீட்டிய திட்டங்கள், நேற்று (17-06-2008) வெற்றியைப் பெற்றுத்தந்து விட்டன. அதாவது தி.மு.க. கூட்டணியை விட்டு பா.ம.க. விலக்கப்பட்டு விட்டது.
 
அன்புச் சகோதரி என்று ஒரு காலத்தில் போயஸ்கார்டனை நோக்கி சென்ற ராமதாஸ் அவர்கள், இந்த வார இறுதியைக் கொண்டாட, மீண்டும் போயஸ்கார்டனுக்கு சென்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
 
தி.மு.க. கூட்டணியிலிருந்து நீக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியானது, அடுத்த முறையும் மத்தியிலும், மாநிலத்திலும் பதவிகளை அனுபவிக்கத் தயாராகிவிட்டது என்றே தோன்றுகிறது. அடுத்தமுறையும் அன்புமணிதான் பீடி, சிகரட் துறை அமைச்சரோ!!!
 
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்லலாம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், மிகச்சரியாக அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர் ஐயா ராமதாஸ் அவர்கள்தான். பாராட்டுக்கள் !

3 comments:

Anonymous said...

//இந்த வார இறுதியைக் கொண்டாட, மீண்டும் போயஸ்கார்டனுக்கு சென்றாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.//

?????????

மனதின் ஓசை said...

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

http://manathinoosai.blogspot.com/2008/06/blog-post_18.html

word verification-ஐ எடுத்துவிடுங்கள்.

Anonymous said...

அம்மா மோதிக்கு நூறு விதத்தில் படைத்தார்.
அய்யாவுக்கு ஆட்டுக்கால் சூப்பா அல்லது எலும்புத் துண்டா?(இன்னொரு தலைவர்க்குப் போட்டது மாதிரி!)