Saturday, May 3, 2008

கர்நாடக தேர்தல் - கருத்து கணிப்பு

டெல்லி: கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அடுத்த இடத்தில் பாஜக உள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் வரும் 10, 16, 22 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் சிஎன்என்-ஐபிஎன் செய்தி தொலைகாட்சி, டெக்கான் ஹெரால்டு செய்திதாள் மற்றும் சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனம் சேர்ந்து கர்நாடக தேர்தல் குறித்த கருத்து கணிப்பை நடத்தியது.

5,124 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 114 இடங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பாஜவுக்கு 60 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிகிறது. தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாம்.

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 49 இடங்களிலும், பாஜக 19 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் தேர்தலில் சதவீத அடிப்படையில் காங்கிரஸ் 39 சதவீதம் வாக்குகள் பெறக்கூடும். பாஜக 28 சதவீதமும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 சதவீதமும் மற்ற கட்சிகள் 13 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் வெறும் 2 சதவீத வாக்குகளே பெறும் என்று தெரிகிறது.மக்களிடம் பிரபலமாக உள்ள முதல்வர் வேட்பாளர்களில் பாஜக சார்பில் எடியூரப்பாவுக்கு 27 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக குமாரசாமிக்கு 22 சதவீத வாக்காளர்களும் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 16 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.

பெங்களூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி நிலவுகிறது. பாஜக மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.மத்திய கர்நாடகா, கடலோர பகுதி, ஆந்திர எல்லைகளில் உள்ள தொகுதிகளில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

லிங்காயத்து சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் வட கர்நாடகத்திலும் மகாராஷ்டிர எல்லை பகுதியில் உள்ள தொகுதிகளில் பாஜக முன்னணி வகிக்கிறது.காங்கிரசுக்கு பரவலாக பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் ஆதரவு உள்ளது.

பாஜகவுக்கு லிங்காயத்துகள், முற்பட்ட சமூகத்தினரிடம் அதிக செல்வாக்கு உள்ளது.மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒக்கலிகா சமுதாயத்தினரின் ஆதரவு உள்ளது.

0 comments: