ஜியாஜிங்: வாகனப் போக்குவரத்துக்கான உலகின் அதிநீள கடல்பாலம் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் யாங்சீ ஆறு டெல்டா பகுதியில் உலகின் அதிநீள கடல் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 36 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் சீனாவின் பல்வேறு பகுதிகளை முக்கிய தொழில் நகரமான ஷாங்காயுடன் இணைக்கிறது.இதன்மூலம் ஹையான், ஜியாஜிங், சிக்ஸி, நிங்போ ஆகிய நகரங்களில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கருதப்படுகிறது. இந்த மேம்பாலத்தில் சோதனைமுறையில் வாகனப்போக்குவரத்து விரைவில் அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பான போக்குவரத்தை கருத்தில் கொண்டு இந்த சமயத்தில் டிரக்குகள், கனரக மற்றும் ஆபத்தான கெமிக்கல் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த பாலத்தினால் நிங்போ நகரில் இருந்து ஷாங்காய் துறைமுகத்துக்கும் செல்லும் பாதைதூரம் ஏறக்குறைய 120 கி.மீ. குறைந்துள்ளது. சுமார் 680 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளையும் அதிக அளவில் ஈர்க்கும் விதத்தில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுளளது.
பாலம் கடந்த 2003ல் கட்டத் தொடங்கப்பட்டு 2007ல் முடிவடைந்தது. பல்வேறு தரச்சோதனைகளுக்குப் பிறகு தற்போது போக்குவரத்துக்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2 comments:
இது ராமர் பாலத்தை விட பெரியதா? இருக்கவே முடியாது.
இது ஒரு அதிசயமா?
பல லட்சம் வருசத்துக்கு மின்னாடியே
எங்கூரு குரங்குக கடலுக்கு அடியிலயே
பாலம் கட்டியிருக்கு.
நம்ம ஆளுகளுக்கு எப்பவுமே உள்ளூர்
பெருமை தெரியாது. நீ என்னமோ கடலுக்கு மேல மனுசப்பய பாலம் கட்டுனத பெரிசா பீத்திக்கிற. போய்யா.
Post a Comment