நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 80 காலரிக்கும் மேலாக இருக்கும்போது, அதைவிடக் குறைவாக வெறும் 14 காலரி வெப்ப அளவே இருக்கும் அன்னாசிப் பழத்தை நாம் அதிக சூடு என்று சொல்வது வேடிக்கைதான் என்கிறது தமிழ் மருத்துவம். அன்னாசிப் பழத்தைப் போன்ற வெப்ப அளவு இருப்பதுதான் மாம்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகும்.
ஒருபக்கத் தலைவலி, இரு பக்கத் தலைவலி, கண், காது, பல் நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்தி போண்ற நோய்கள்
தேனும், அன்னாசிப்பழமும் சேர்த்துச் செய்யப்படும் பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிடின் குணமாகும்.
மஞ்சட் காமாலையை அன்னாசிச் சாறு குணப்படுத்தும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவுமாம்.
இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு, அன்னாசிச் சாறு நல்ல மருந்து.
பசி எடுக்காமை, வாந்தி மயக்கம், பித்தம் போன்றவைகளை அன்னாசி நீக்குவதில் வல்லது.
உங்கள் தேகம் பளபளக்க அன்னாசியை சாப்பிடும் பழக்கத்தை எற்படுத்துங்கள்.
தாகத்தைத் தீர்ப்பதால் கோடைக்கு ஏற்ற சாறு அன்னாசிச் சாறாகும்.
- படித்ததும், பாட்டி சொன்னதும
0 comments:
Post a Comment